தமிழக செய்திகள்

புகையிலை விற்ற கடை உரிமையாளர் கைது..!

கடையில் புகையிலை விற்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

கபிஸ்தலம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகினறனர்.

இந்த நிலையில் கபிஸ்தலம் பகுதியில் இத்தகைய புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி தலைமையிலான போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது கணபதி அக்ரஹாரம் தட்டாரத்தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் சரவணன் (வயது 20) என்பவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் சரவணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு