தமிழக செய்திகள்

வேலூர், ராணிப்பேட்டையில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வேலூர், ராணிப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அதைபோல தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் 1-5 ஆம் வகுப்பு வரை இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு