தமிழக செய்திகள்

விபத்தில் பொம்மை வியாபாரி சாவு

வந்தவாசி அருகே விபத்தில் பொம்மை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் விக்ரம் (வயது 45). சுப்பிரமணி மகன் காளிதாஸ் (37), விஜய் ஆகிய 3 பேரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் வளையல் மற்றும் பொம்மை வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வியாபாரத்தை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர்.

மருதாணி அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த போது திடீரென முன்னால் சென்ற லாரி மீது மாட்டார் சைக்கிள் உரசியது. இதில் 3 பேரும் நிலைத்தடுமாறி விழுந்தனர். இதில் விக்ரம், விஜய் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்ரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது