கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

ஆவடியில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின - மின்சார ரெயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் சென்னை ஆவடியில் மழைநீரில் தண்டவாளங்கள் மூழ்கியுள்ளது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, சிக்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் செல்லக்கூடிய மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்