தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வியாபாரி உயிரிழந்தார்.

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு ராசி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 58). ஆடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ஜாகிர் உசேன்(35). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூரில் இருந்து விசுவக்குடி நோக்கி ஆடு வாங்குவதற்காக வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜாகிர் உசேன் ஓட்டினார். விசுவக்குடியை நெருங்கிய பொழுது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அக்பர்அலி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாகிர் உசேன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் அக்பர் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு