தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் பணிக்காக திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணிக்காக திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வௌயிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோயம்பேடு நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் திருமங்கலம் சர்வீஸ் சாலை, 15-வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து 4-வது அவென்யூ வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து அண்ணாநகர் 2-வது அவென்யூவிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் வலது புறம் திரும்புவதற்கும், யூ டர்ன் செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 13-வது மெயின் ரோட்டை பயன்படுத்தி 15-வது மெயின் ரோட்டில் வலதுபுறம் திரும்பி அண்ணாநகரை அடையலாம்.

அதேபோல் அம்பத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக 15-வது மெயின் ரோட்டில் திரும்பி 13-வது மெயின் ரோடு வழியாக 4-வது அவென்யூவில் வலது புறமாக சென்று பின்னர் இடது புறமாக கோயம்பேடு நோக்கிச் செல்ல வேண்டும். 15-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து 4-வது அவென்யூ சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்