தமிழக செய்திகள்

நெல்லையில் பரிதாபம்: விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு

ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்த 2 சிறுவர்களை அங்கு கிடந்த தேங்காயில் இருந்த விஷவண்டு கடித்தது.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மாவடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். கூலித்தெழிலாளியான இவரது மகன் ஜீவானந்தம் (வயது 7), அங்குள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணித்துரை மகன் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நித்தின்ராஜ்(6). இந்த 2 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு கிடந்த தேங்காயில் இருந்த விஷவண்டு (கடந்தை) 2 சிறுவர்களையும் கடித்தது. இதனால் 2 பேரும் அலறினார்கள். 2 சிறுவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். நேற்று அதிகாலையில் ஜீவானந்தத்திற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவானந்தம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்