தமிழக செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பாக நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைச் செயலாளர் நவநீதன் தலைமை தாங்கினா. கிளை செயலாளர் ரகு முன்னிலை வகித்தார். இதில், பொருளாளர் கே.முருகானந்தம், துணைத்தலைவர் பிரகாஷ், துணை செயலாளர்கள் குமார், ரவி மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்