தமிழக செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி,

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சென்னையில் 2 நாட்கள் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகள் என்பதை, 4 ஆண்டுகளாக மாற்றி அமைத்ததை கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வலியுறுத்தியும் போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில், ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் இப்ராஹீம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சம்பள உயர்வு ஒப்பந்தத்தை 4 ஆண்டுகளாக மாற்றியதை கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 82 மாத பண பலன்கள் வழங்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்