தமிழக செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி, 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தற்காலிமாக தொழிலாளர்கள் 3 ஆண்டில் இருந்த 4 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற அரசின் உத்திரவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மண்டல தலைவர் சபாஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ்கள் சாலையில் பழுதாகி நிற்காத வகையில், தேவையான உதிரி பாகங்களை வாங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில துணை தலைவர் செய்து இப்ராஹீம் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்