தமிழக செய்திகள்

கார் மீது லாரி மோதல்:தனியார் நிறுவன ஊழியர் பலி

தேவதானப்பட்டி அருகே கார் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பஞ்சுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னக்குமார் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர், அதே பகுதியை சேர்ந்த அகில் (28) என்பவருடன் வண்டிப்பெரியாரில் இருந்து காரில் திருச்சி அருகே துறையூருக்கு சென்று கொண்டிருந்தார். காரை அகில் ஓட்டினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பரசுராமபுரம் பிரிவு அருகே, அகில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பிரசன்னக்குமார் காரில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டியில் இருந்து திருப்பூர் சென்ற கன்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற காரின் பின்புறம் மோதியது. இதில் கார் சாலையோரம் இருந்த 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரசன்னக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தேவதானப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது