தமிழக செய்திகள்

லாரி-ஸ்கூட்டர் மோதல்; வியாபாரி சாவு

லாரி-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வியாபாரி இறந்தா

அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 46). பழ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு மகாலிங்கபுரத்தில் இருந்து அத்தாணி சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சென்னிமலை கவுண்டர் புதூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கனரக லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தேவேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு