தமிழக செய்திகள்

கல்லூரி சேர்க்கை தொடர்பாக செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை ரத்து செய்யப்படவேண்டும்: டி.டி.வி.தினகரன்

கல்லூரி சேர்க்கை தொடர்பாக செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை ரத்து செய்யப்படவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கல்லூரி சேர்க்கைக்காக செல்லும் மாணவர், உடன் செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து மதிப்பெண் சான்றிதழை காட்டினால் அனுமதிக்கவேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு