தஞ்சாவூர்:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் ஜெய ஹரிணிக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி மகன் ராமநாத துளசிக்கும் கடந்த மாதம் 16-ந் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து தஞ்சையை அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் சசிகலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவரும், டி.டி.வி.தினகரனும் மேடையிலேயே தனியாக நின்று சிறிதுநேரம் பேசி கொண்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஓ.ராஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.அ.தி.மு.க.வில் சசிகலா சேர்த்து கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு
சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார். என்றார்.
இது குறித்து டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், எப்போதும் நிதானமாக பேசும் ஓ பன்னீர் செல்வம், சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்றார்.
சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா டி.டி.வி. தினகரன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.