தமிழக செய்திகள்

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் இதுவரை நடைபெறாததால் அது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமமுக பெதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கெரேனா தெற்று அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தி இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும் என்று தினகரன் கேட்டுக் கெண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது