தமிழக செய்திகள்

தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் காப்பர் பொருட்கள் திருட்டு

தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் காப்பர் பொருட்கள் திருடப்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில், மின்நிலையத்துக்கு தேவையான பொருட்களை வைப்பதற்காக குடோன் உள்ளது. இந்த குடோன் பொறுப்பாளராக சுப்பிரமணியன் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இந்த குடோனில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்து உள்ளார்.

பின்னர் குடோனல் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் நிக்கல் குழாய்கள், காப்பர் நிக்கல் கண்டென்சர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பா பொருட்களை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்