தமிழக செய்திகள்

தருமபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது

ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கூட்ரோடு அருகே உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிவதாக மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்

கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த வீட்டில் சென்று பார்த்தபோது 4 பேர் கொண்ட குழுவினர் கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவர் தப்பியோடிய நிலையில், இருவர் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்த ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர், இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவானர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்