குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் கோவில் வளாகத்தில் உலகம் நன்மை பெற வேண்டி மகா யாகம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளினார். இதையடுத்து பூசாரிகள் தாலாட்டு பாட ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சின்னக்கடை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.