தமிழக செய்திகள்

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம் வரும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், நாளை மறுநாள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ராமநாதபுரம்,

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் (ஜூன் 21) ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில், காலை 6 மணியளவில், யோகா தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இதற்காக நாளை மாலை ராமநாதபுரத்திற்கு தனி ஹெலிகாப்டரில் வரும் ராஜ்நாத் சிங், மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். பின்னர், உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்திற்கு சென்று ஆய்வு நடத்துகிறார். தனுஷ்கோடி அரிச்சல் முனையில், காலை 6 மணிக்கு நடைபெறும் கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை, மெரைன் போலீசாரின் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.,க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்