தமிழக செய்திகள்

வேங்கைவயல் விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. மனு தள்ளுபடி

வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தெட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு 2023ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.147 நபர்களிடம் விசாரணை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை என பல்வேறு வகைகளில் கடந்த 394 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும்நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

இந்நிலையில் வேங்கை வயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக வேங்கைவயல் விவகாரத்தை விசாரணை செய்து வந்த விசாரணை அதிகாரி பால்பாண்டி இன்று மாற்றம் செய்யப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி கல்பனா தத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்