தமிழக செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

ஆலங்குளம் ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தினத்தந்தி

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள அய்யனார்குளம் கிராமத்தில் தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ஜான் சுபாஷ் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறந்த கிடேரி கன்று வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

முகாமில் ஊத்துமலை கால்நடை மருத்துவர் ரமேஷ் தலைமையில் கால்நடை ஆய்வாளர் மகேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கீதா மற்றும் பிச்சையா கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முடிவில், நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் நன்றி கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது