தமிழக செய்திகள்

மதுரையில் கட்சியின் முதல் மாநாடு: பிறந்தநாளில் நடத்த விஜய் திட்டம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்தார்.

இந்த மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அடுத்த மாதம் 22-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி மதுரையில் தனது கட்சி சார்பில் முதல் பிரமாண்டமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து விஜய்யின் ஒட்டுமொத்த ரசிகர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்