தமிழக செய்திகள்

'விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மக்கள் கையில்தான் இருக்கிறது என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை,

நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அ.தி.மு.க.வின் வாக்குகளை பாதிக்காது. ஏற்கனவே சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கை மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் அவர் கமல்ஹாசனைப் போல் ஆகிவிடக்கூடாது. நாட்டை சீர்திருத்தப் போவதாகக் கூறி அரசியலுக்கு வந்த கமல்ஹாசன், இப்போது எம்.பி. சீட்டுக்காக மற்றொரு கட்சியுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்."

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார். 

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்