தமிழக செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தினத்தந்தி

நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரம் ஊராட்சி, சின்னமநாயக்கன்கோட்டை கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், நூத்துலாபுரம் ஊராட்சி துணைத்தலைவர் சங்கிலிபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது