தமிழக செய்திகள்

மின்பொறியாளர் அலுவலகம் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியல்

மின்பொறியாளர் அலுவலகம் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

ஓசூர் கிராமத்தில் மின்பொறியாளர் அலுவலகம் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தில் இளநிலை மின்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்இணைப்பு அளித்தல், மின்கட்டணம் பெறுதல், மின்பழுது நீக்குதல் உள்ளிட்டவை இந்த அலுவலகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த அலுவலகத்தை அருகில் உள்ள மற்றொரு ஊருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஓசூர் கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மின் அலுவலக மாற்றத்தை கண்டித்து அந்த மின் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அங்கு சென்று சமரசம் செய்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்