தமிழக செய்திகள்

“வாக்குச் சுத்தம் சொல்லிலும் இல்லை செயலிலும் இல்லை” - கமல்ஹாசன் பதிவு

வாக்குச் சுத்தம் சொல்லிலும் இல்லை செயலிலும் இல்லை என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், அய்யப்பன்தாங்கலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவாகி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மநீம வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்குப் பிறகே ஸ்ரீதேவிக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், வாக்குச்சுத்தம் சொல்லிலும் இல்லை, செயலிலும் இல்லை என்று தனது பதிவில் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை