தமிழக செய்திகள்

குழாய் உடைப்பால் வீணான குடிநீர்

குழாய் உடைப்பால் குடிநீர் வீணானது.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் பிச்சாண்டார்கோவில், பளூர், பணமங்கலம், கூத்தூர், ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பளூர் பகுதியில் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு கொண்டு செல்லப்படும் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. இதைப்பார்த்த பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு