தமிழக செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாகிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகாவிற்கு திருமழ பாடி கொள்ளிடம் ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் புறவழிச்சாலையில் (செந்துறை ரோடு ரவுண்டானா அருகில்) அந்த குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. சில நாட்களுக்கு முன்பு உடைப்பை சரி செய்துள்ளனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிகொண்டிருக்கிறது. இதனால் சாலையின் ஓரம் உள்ள குடியிருப்புகளில் நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் அந்த குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் பகுதிகளுக்கு தண்ணீர் குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்