கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் - வேதாந்தா நிறுவனம் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தற்காலிகமாக அனுமதி வழங்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆக்சிஜன் தயாரிக்க, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 4 மாதங்கள் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு வெளியிட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முழு திறனுக்கு 1000 டன் மருத்துவ உதவிக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இது குறித்து நாங்கள் ஏற்கெனவே வல்லுநர்களிடம் பேசி வருகிறோம். மேலும் இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை, எப்படி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வதென்றும், இந்தியாவில் மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்வது குறித்தும் பேசி வருகிறோம் என்று அதில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்