கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மத்திய குழுவிடம் புயல் நிவாரணப்பணிக்கு ரூ.3,758 கோடி வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம் - அமைச்சர் உதயகுமார் தகவல்

மத்திய குழுவிடம் புயல் நிவாரணப்பணிக்கு ரூ.3,758 கோடி வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை,

மத்திய குழுவிடம் புயல் நிவாரணப்பணிக்கு ரூ.3,758 கோடி வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு அறையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ந்தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் 5-ந்தேதி வரை உள்ள இயல்பான மழையளவு 377.1 மி.மீ., 385.5 மி.மீ. அளவு பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவைவிட 2 சதவீதம் கூடுதலாகும்.

தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 144 பாசன ஏரிகளில், 3 ஆயிரத்து 487 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. மத்திய குழுவினர் புயல் சேதம் குறித்து நாளை (இன்று) முதல் ஆய்வில் ஈடுபட உள்ளனர். சேத மதிப்பீடு குறித்து மத்திய குழுவினரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. தற்காலிக நிவாரணமாக ரூ.650 கோடி தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடி சீரமைப்பிற்கு ரூ.3 ஆயிரத்து 108 கோடியும் மொத்தமாக ரூ.3 ஆயிரத்து 758 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்