தமிழக செய்திகள்

'கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் புதுக்கோட்டையில் திருமயம் பகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யார் வந்தாலும், கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது