பாபநாசம் தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஜமாபந்தியில் 967 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகள் 54 பேருக்கும் மற்றும் 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 10 பேருக்கு தனிப்பட்டாவும், 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழும், 1 நபருக்கு மின் இணைப்பு சான்றிதழும், 6 பயனாளிகளுக்கு இறப்பு சான்றிதழும், 18 பயனாளிகளுக்கு இருளர் சாதி சான்றும், 1 பயனாளிக்கு விதவை சான்றும், 1 பயனாளிக்கு ஒருங்கிணைந்த சான்றும், 10 பயனாளிகளுக்கு தையல் எந்திரமும், வேளாண்மை துறை சார்பில் 1 பயனாளிக்கு மருந்து தெளிப்பான் எந்திரமும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் கல்யாண சுந்தரம் எம்.பி., ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, மாவட்ட துணைச்செயலாளர் கோவி.அய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.