கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? - ஜி.கே.வாசன் பதில்

எந்த கூட்டணியிலும் சேராத சில கட்சிகள் எங்களது கூட்டணிக்கு வரலாம் என்று நம்புகிறோம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சேலம்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் திமுக வெல்ல முடியாது என்பதால் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே இருப்பதால் எந்த கூட்டணியிலும் சேராத சில கட்சிகள் எங்களது கூட்டணிக்கு வரலாம் என்று நம்புகிறோம்.

தொகுதி எண்ணிக்கை, பங்கீடு குறித்து இன்னும் அதிமுகவும், பாஜகவும் பேசி முடிவெடுக்கவில்லை. அதன்பிறகு மற்ற கட்சிகள் அழைத்து பேசப்படும். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஒற்றை அல்லது இரட்டை இலக்கு என எது இருந்தாலும் சுமுகமான முறையில் பேசி முடிவெடுக்கப்படும்.

எங்களை பொறுத்தவரை எதிர்க்கட்சி கூட்டணி தேர்தலுக்கு பிறகு ஆளுங்கட்சியாக மாறும். சட்டசபை தேர்தலை பொறுத்தவரை என்னை தூக்கி சுமந்து கொண்டிருக்கும் தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள்தான் போட்டியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Also read:அரசியல் காரணங்களுக்காக ஜனாதிபதியை மம்தா பானர்ஜி அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி