மதுரை,
மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை நடத்தியது.
கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு ஏழு நாட்கள் காலதாமதம் ஆவது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கொரோனா மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அரசு எதிர்ப்பார்க்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்து விசாரணை ஒத்திவைத்தனர்.