தமிழக செய்திகள்

இடஒதுக்கீட்டில் கல்வி-வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவத்தை டி.என்.பி.எஸ்.சி. கூற மறுப்பது ஏன்? - டாக்டர் ராமதாஸ் கேள்வி

இடஒதுக்கீட்டில் கல்வி-வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவத்தை டி.என்.பி.எஸ்.சி. கூற மறுப்பது ஏன்? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி-வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவத்தை டி.என்.பி.எஸ்.சி. கூற மறுப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?

பொது போட்டி பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? ஆனால் இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பதில் சொல்லமாட்டோம் என்கிறது.

சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கு மிகவும் அவசியமான இந்த விவரங்களை சொல்ல டி.என்.பி.எஸ்.சி. மறுப்பது ஏன்? எதற்காக? இதற்கான விடை தெரிந்தவர்கள் பதில் கூறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு