தமிழக செய்திகள்

கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுமா? பல்கலைக்கழக மானியக்குழு பதில்

கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுமா? பல்கலைக்கழக மானியக்குழு பதில்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், தேர்வும் ஆன்லைனிலேயே நடந்தது. இந்தநிலையில் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால், தேர்வும் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்து விட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வு இல்லை என்றும், ஆப்லைன் முறையிலேயே (நேரடி முறையில்) செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்றும், அது போலியான அறிக்கை என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது