தமிழக செய்திகள்

பேரறிவாளன் விவகாரம்: திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா? திருநாவுக்கரசு பதில்

பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங். நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை. பேரறிவாளனை விடுவிக்கும் போது நீதிமன்றம் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்தே அதிமுக மற்றும் திமுக கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொல்லப்பட்டதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸார் தங்கள் கருத்தில் தெளிவாக உள்ளனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்