தமிழக செய்திகள்

புறக்காவல்நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

புறக்காவல்நிலையம் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகரில் வழிப்பறி, திருட்டு, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக நகரின் நான்கு எல்லைகளிலும் புறக்காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி புளியம்பட்டியில் விருதுநகர் சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதன் மூலம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய முடியும். மேலும் இங்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால் வழிப்பறி, செயின் பறிப்பு, கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து பல மாதங்கள் ஆகியும் புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே புறக்காவல் நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் என அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் காவல்நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை