தமிழக செய்திகள்

புதுப்பேட்டை அருகே விஷ வண்டு கடித்து பெண் சாவு

புதுப்பேட்டை அருகே விஷ வண்டு கடித்து பெண் உயிரிழந்தார்.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள பைத்தாம்பாடி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி ரத்தினாம்பாள் (வயது 68). சம்பவத்தன்று ரத்தினாம்பாள் அங்குள்ள அய்யனார் கோவில் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த விஷ வண்டு ஒன்று ரத்தினாம்பாளை கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டாகள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரத்தினாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு