தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

திமிரி அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமலிங்கம் அடிகள் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுதா (வயது 32), இவர் ஆற்காடு பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன் சுதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திமிரியை அடுத்த வரகூர் கிராமத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு நோக்கி வந்தனர்.

எலாசி குடிசை கூட்ரோடு அருகே வரும்போது சாலையில் இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்