தமிழக செய்திகள்

கள்ளக்காதலனுடன் பெண் திடீர் மாயம்

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் பெண் திடீர் மாயம் கடத்தி சென்றதாக கணவர் புகார்

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே குரு பீடபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்(வயது 49), இவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி ஜானகி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(36) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ராஜ், ராதாகிருஷ்ணனை கண்டித்தார்.

இந்த நிலையில் ஜானகியும், ராதாகிருஷ்ணனும் திடீரென மாயமானார்கள். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த தனது மனைவியை ராதாகிருஷ்ணன் கடத்தி சென்று விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன், ஜானகி இருவரையும் தேடி வருகிறாகள். 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்