தமிழக செய்திகள்

கலெக்டர் அலுவலக கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது

திருச்சி கலெக்டர் அலுவலக கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே நேற்று முன்தினம் காலை மர்ம ஆசாமி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். சிறிதுநேரத்தில் அவர் திடீரென நுழைவுவாயிலில் உள்ள கண்ணாடி மீது கற்களை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த மாடசாமி (வயது 30) என்பது தெரியவந்தது. பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியான இவர் தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக்கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர் கற்களை வீசி கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது