தமிழக செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீடாமங்கலம்:

மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

நீடாமங்கலம் அருகே கேவில்வெண்ணி வடக்குத்தெருவில் வசித்து வந்தவர் ராஜா (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நீடாமங்கலம் பேலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து நீடாமங்கலம் பேலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் பேலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபேது, ராஜா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

விஷம் குடித்து தற்கொலை

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கெண்டனர். விசாரணையில் ராஜாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் 6 மாதத்திற்கு முன்பு அவரது மனைவி கவிதா கேபித்துக்கெண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கெலை செய்து கெண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்