தமிழக செய்திகள்

தொழிலாளி மர்ம சாவு

கொடைரோட்டில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கொடைரோடு ஏட்டுநாயக்கர் காலனி என்னுமிடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவுத்தாய் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கொடைரோடு அருகே உள்ள மாவுத்தன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரசேன் (வயது 45) என்பது தெரியவந்தது. பின்பு அவருடைய உடலை பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்