தமிழக செய்திகள்

உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் வீடியோவில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு