தமிழக செய்திகள்

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசி, 

சிவகாசி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த பயிற்சி வகுப்பு திருத்தங்கல் எஸ்.ஆர். என். அரசு மேல்நிலைப்பள்ளி, ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மன்கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் 255 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. ரிசர்வ்லைன் மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை சிவகாசி மாவட்ட கல்வி அதிகாரி எம். பெருமாள், சிவகாசி வட்டார கல்வி அலுவலர் ஞானக்கனி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு யோகா மற்றும் உடல் நலம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தலைமையாசிரியர் தேவராஜன் தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய பயிற்றுநர்கள் ராசிங்கம், வசந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு