தமிழக செய்திகள்

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அயனாவத்தில் கொரோனா குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும் சதவிகிதம் 87.05% ஆக உள்ளது. இதற்கு தினசரி அடிப்படையில் பரிசோதனைகளை அதிகரித்தது முக்கிய பங்கு வகித்துள்ளது.

சென்னையில் ஆரம்பகட்டத்தை விட பின் நாட்களில் தொற்று குறைவதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணம். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடரும் என்றார்.

மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் என்று தெரிவித்த அவர் புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்காக இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% - 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்