தமிழக செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

குருவிகுளம் அருகே, இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவேங்கடம்:

குருவிகுளம் அருகே, இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பால் வியாபாரி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அடுத்துள்ள வாகைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் எடிசன் (வயது 23). பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும், ராஜபாளையத்தை சேர்ந்த கவுதமி (20) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று கவுதமிக்கும், எடிசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்து காணப்பட்ட கவுதமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தாராம்.

வியாபாரம் முடிந்து வந்ததும் இதை பார்த்த எடிசன் இதுபற்றி குருவிகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து கவுதமியை மீட்டனர். அவருக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனிக்காமல் கவுதமி பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு மட்டுமே ஆகி உள்ளதால் இது குறித்து சங்கரன்கோவில் துணை கலெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு