தமிழக செய்திகள்

புதுக்கோட்டை கோர்ட்டில் வாலிபர் சரண்

தொழிலாளி கொலை வழக்கில் புதுக்கோட்டை கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்.

தொழிலாளி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி.

இவரை அதே பகுதியை சேர்ந்த வடிவேலு (35) என்பவர் முன்விரோதம் காரணமாக கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கையா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோர்ட்டில் சரண்

இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய வடிவேலுவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த வடிவேலு புதுக்கோட்டை கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 ல் இன்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்