தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் அருகே புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 32). நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பல இடங்களில் ஜாதகம் பார்த்துள்ளனர். ஆனால் ஜாதகம் பொருந்தாததால் 7 ஆண்டுகளாக திருமணம் தள்ளி போனதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வினோத் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு